Advertisment

“தலைவா ரஜினி ஒவ்வொரு முறையும் அதனை செய்கிறார்” - விருது பெற்றதற்கு வாழ்த்திய சச்சின்!

SACHIN - RAJNIKANTH

திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நேற்று (25.10.2021) அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டது.

Advertisment

இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள் குவிகின்றன. இந்தநிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,ரஜினியை ‘தலைவா’ என அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. தலைவா ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதனை செய்கிறார். தனது படைப்புகளால் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

rajnikanth Sachin Tendulkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe