Advertisment

SA vs IND : இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்

SA vs IND : South Africans are great to beat India

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சாய் சுதர்சன் 62 ரன்களும்,கேப்டன் கே.எல். ராகுல் 56 ரன்களும்,அர்ஷ்தீப் சிங் 18 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் அரைசதம் அடித்த சாய் சுதர்சன் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்த நிலையில், 2வது போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அதே சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சார்பில் டோனி டெ சோர்ஸி ஆட்டமிழக்காமல் 119 ரன்களும், ஹெண்ட்ரிக்ஸ் 52 ரன்களும், வான் டெர் டஸ்ஸென் 36 ரன்களும் குவித்தனர். இறுதியாக 42.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து தென்னாப்பிரிக்கா அணி 215 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

Advertisment
cricket India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe