Advertisment

இந்திய அணியில் மயங்க் அகர்வால்: தேசிய கிரிக்கெட் அகடாமியில் ருதுராஜ் கெய்க்வாட்!

ruturaj

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இருபது ஓவர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட முதல் ஆட்டத்தில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த இரண்டு போட்டிகள், இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.

Advertisment

இந்தநிலையில் மணிக்கட்டு காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். முதல் இருபது ஓவர் போட்டியில் ருதுராஜ் விளையாடவிருந்தும், மணிக்கட்டில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் அந்த போட்டியில் விளையாடமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ருதுராஜ் கெய்க்வாட் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அண்மையில் காயமடந்த தீபக் சஹார், கே.எல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe