Advertisment

ருதுராஜ் கெயிக்வாட்டுடன் கைகோர்த்த பிரபல விளம்பர நிறுவனம்!

Ruturaj Gaikwad

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.நடப்புத் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெயிக்வாட், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தொடக்க போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு சென்னை அணியின் பிற்பாதி போட்டிகளில் களமிறங்க தொடர் வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாகப்பயன்படுத்திக் கொண்ட ருதுராஜ் கெயிக்வாட், 6 போட்டிகளில் 3 அரை சதங்கள் விளாசி 204 ரன்கள் குவித்தார்.

Advertisment

இந்நிலையில், பிரபல விளம்பர நிறுவனமான 'பேஸ்லைன்வென்ச்சர்ஸ்' நிறுவனமும், ருதுராஜ் கெயிக்வாட்டும் புதிய ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி, வணிக நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் விளம்பர ஒப்பந்தங்களை இனி இந்நிறுவனம் கவனித்துக் கொள்ளும் .

Advertisment

பிவி சிந்து, புவனேஷ் குமார் உள்ளிட்ட பல முன்னணி விளையாட்டு வீரர்களோடும் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ipl 2020 Ruturaj Gaikwad
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe