தீபக் சஹரை தொடர்ந்து மற்றொரு சிஎஸ்கே வீரருக்கு கரோனா...?

Ruturaj Gaikwad tested positive for corona

சென்னை வீரர் ருதுராஜ் கைக்வாட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடரானது தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகியுள்ளனர். அதேபோல அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணியும் சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தது.

தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த சூழலில், சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், அணி ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹரை தொடர்ந்து மற்றொரு சென்னை வீரரான ருதுராஜ் கைக்வாட்டுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CSK ipl 2020
இதையும் படியுங்கள்
Subscribe