டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 600 உறுப்பினர்கள் கலந்து கொண்ட டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பாதர் அகமதை, சங்கத்தில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவுதம் கம்பீர், "டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் மோதலில் ஈடுப்பட்டவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும். சங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்" என கூறி பிசிசிஐ மற்றும் கங்குலி ஆகியோரை டேக் செய்துள்ளார்.