Royal Challengers Bangalore vs sunrises hyderabad teams ipl match

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின. சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று (14/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர், 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

Advertisment

Royal Challengers Bangalore vs sunrises hyderabad teams ipl match

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54, மணீஷ் பாண்டே 38 ரன்களை எடுத்தனர். அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59, கேப்டன் விராட் கோலி 33 ரன்களை எடுத்தனர்.