Advertisment

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்; சென்னையை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி!

Royal challenger bangalore won the play off match

Advertisment

ஐபிஎல் 2024இன் 65ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (18-05-24) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணி சார்பில் பேட்டிங் செய்த விராட் கோலி 29 பந்துகளில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடித்து 47 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடித்து 54 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் அடித்து பெங்களூர் அணி ஆட்டத்தை முடித்தது. இதனை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சார்பில் பந்து வீசிய, தாகூர் 2 விக்கெட்டும், தேஷ்பாண்டே மற்றும் சாந்த்னர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து 219 ரன்கள்இலக்கை முன்வைத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பேட்டிங் செய்த ருத்துராக் எந்தவித ரன்களும் எடுக்காமல் அவுட்டானார். ரவிந்தீரா 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடித்து 61 ரன்கள் அடித்து அவுட்டானார். மிக்ச்செல் 4 ரன்களும், சிவம் துபே 7 ரன்களும், சாந்த்னர் 3 ரன்களும் அடித்து அவுட்டானார்கள். மகேந்திர சிங் தோனி 13பந்துகளில் 3பவுண்டரிகள் 1 சிக்சர்அடித்து 25 ரன்கள் அடித்து அவுட்டானார். ரவீந்திர ஜடேஜா 22பந்துகளில் 3சிக்சர்கள், 3பவுண்டரிகள் அடித்து 42ரன்கள் அடித்து மைதானத்தில் இருந்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது.

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பந்து வீசிய மேக்ஸ்வெல், சிராஜ், தயால், கீரின், லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe