Advertisment

ரொனால்டோ செயலால் 30 ஆயிரம் கோடியை இழந்த கோகோ கோலா!

ronaldo

Advertisment

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று(15.06.2021) போர்ச்சுகல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்தப் போட்டியில்3-0 என்ற கோல் கணக்கில்போர்ச்சுகல் அணி ஹங்கேரியை வீழ்த்தியது.போட்டிக்குப் பிறகுபோர்ச்சுகல் அணி கேப்டனும்கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ரொனால்டோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலைக் கையிலெடுத்து போர்த்துகீசிய மொழியில் தண்ணீர் என்றும் கூறினார். இதனால் கோகோ கோலா நிறுவனத்துக்கு4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோ செய்கையால் கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்து, இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 4 மில்லயன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

coco cola Christiano Ronaldo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe