Skip to main content

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ; மொராக்கோவுடன் தோற்று தொடரில் இருந்து  வெளியேறியது

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

Ronaldo left in tears; Lost to Morocco and exited the series

 

ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதியின் மூன்றாவது போட்டியில் மொராக்கோ - போர்ச்சுக்கல் அணிகள் விளையாடின.

 

காலிறுதியில் மொராக்கோ வெற்றி பெற்றால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெறும். போர்ச்சுக்கல் வென்றால் நான்கு முறை இயலாமல் ஐந்தாவது முறையாக தொடரும் ரொனால்டோவின் உலகக்கோப்பைக்கான கனவு தொடர்ந்திருக்கும். இதுவே இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் எகிற வைத்தது. 

 

கடந்த போட்டியைப் போலவே ரொனால்டோ தொடக்க லெவனில் களமிறக்கப்படவில்லை. மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமை பெற்றபின் அந்த அணி அட்டாக் செய்ய முன்னேறினர். இதனால் போர்ச்சுக்கல் அணி தடுமாற மொரக்கோ அணி 42 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

 

இரண்டாம் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். எனினும் மொராக்கோ அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இரண்டாம் பாதியும் முடிவுக்கு வர இரு அணிகளும் எந்த கோல்களையும் அடிக்கவில்லை. இதனால் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

37 வயதாகும் ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்பதால் களத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

 

 

Next Story

மெஸ்ஸி… எம்பாப்பே… அர்ஜென்டினா… உலகக்கோப்பையில் சாதனைகள்!

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

- தெ.சு.கவுதமன்

 

Messi… Mbappe… Argentina… achievements in the World Cup!

 

நேற்று (18.12.22) நிறைவடைந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதியாட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸியும், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவும் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். அவற்றின் தொகுப்புகளைப் பார்க்கலாம்.

 

எம்பாப்பே நேற்று ஹாட்ரிக் கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது ஹாட்ரிக்காக அது அமைந்தது. இதற்கு முன்னதாக 1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஜியோஃப் ஹாட்ரிக் அடித்திருந்தார். அதேபோல், மொத்தம் 9 கோல்களை அடித்து, எம்பாப்பே தங்க ஷூ விருதினைப் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதுவரை நடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில், முதல் 90 நிமிடங்களில் சமமான கோல்கள், உபரி நேரத்திலும் சமமான கோல்களென அடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதற்கு எம்பாப்பே தான் காரணமாக இருந்தார். அதேபோல், இவரது ஹாட்ரிக்கால் மட்டுமே ஆட்டம் சம நிலைக்கு வந்தது என்பதும் ஒரு சாதனையே. பெனால்ட்டி ஷூட்டிலும் எம்பாப்பே ஒரு கோலடித்ததன் மூலம், ஒரு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் 4 கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 

நேற்றைய பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றது. உலகக்கோப்பை ஆட்டங்களில் 26வது ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அதிக உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார். 7 கோல்களை அடித்ததோடு, மூன்று கோல்களுக்கு உதவி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி தங்கப் பந்து விருது பெற்றார். உலகக்கோப்பை ஆட்டங்களில் ஏற்கெனவே 2014ஆம் ஆண்டிலும் இதேபோல் தங்கப்பந்து விருதினை மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்மூலம், இருமுறை தங்கப்பந்து விருதினை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். 

 

Messi… Mbappe… Argentina… achievements in the World Cup!

 

மெஸ்ஸியின் இன்னொரு புதுமையான சாதனை, உலகக்கோப்பை ஆட்டமொன்றில் கோலடித்ததோடு, கோலடிக்க உதவியது என்ற வகையில் 'இளம் மற்றும் முதிய வீரர்' என்ற இரட்டைச் சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டத்தில் இச்சாதனை படைத்தபோது அவரது வயது 18 ஆண்டுகள் 357 நாட்களாக இருந்தது. நடப்பு உலகக்கோப்பை ஆட்டத்தில் இதேபோல நெதர்லாந்துக்கு எதிராக சாதனை படைத்தபோது அவரது வயது 35 ஆண்டுகள் 168 நாட்கள்.

 

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் கோலடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். அதேபோல், இதுவரை கலந்துகொண்ட உலகக்கோப்பை போட்டிகளில் 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம், அதிக உலகக்கோப்பைப் போட்டிகளில் வென்றவர் என்ற சாதனையை, ஜெர்மனி வீரர் க்ளோஸ் உடன் பகிர்ந்துகொள்கிறார் மெஸ்ஸி. உலகக்கோப்பை ஆட்டங்களில் 11 மேன் ஆப் தி மேட்ச் விருதுகளைப் பெற்றதில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி.

 

 

Next Story

இறுதியாட்டம்னா இப்படித்தான் இருக்கணும்! மெஸ்ஸி… எம்பாப்பே… மேஜிக் நிமிடங்கள்!

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

- தெ.சு.கவுதமன் 
 

The finale should be like this! Messi… Mbappe… Magic Minutes!

 

பொதுவாக கிராபிக்ஸில் மிரட்டக்கூடிய ஆங்கிலத் திரைப்படங்கள் தொடக்கத்தில், "சீக்கிரம் படத்தப் போடுங்கபா!" என்று சொல்லும்படி இழுவையாகச் சென்று, இடைவேளை நெருங்கும்போது பரபரப்பு தொடங்கி, க்ளைமாக்ஸ் வரும்போது அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தும்படி விறுவிறுப்பாகச் செல்லும். அதே போன்ற உணர்வை நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் கொடுத்தது. 

 

தொடக்கத்தில் முழுக்க முழுக்க அர்ஜென்டினாவே ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணி வீரர்கள், பந்தை பாஸ் செய்வதில் நிறைய சொதப்பினார்கள். மெஸ்ஸியின் படையினர், ஆட்டத்தைத் தங்கள் கால்களிடையே நகர்த்தியபடி கொண்டுசென்றனர். அதன் பலனாக முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கான வாய்ப்பை எளிதாக்கினார்கள். இரண்டாம் பாதியின் தொடக்கமும்கூட அர்ஜென்டினாவின் ஆதிக்கமாகவே அமைந்தது. நேரம் செல்லச்செல்ல... 70வது நிமிடத்தை நெருங்கும்போது பிரான்ஸ் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தைக் காட்டத் தொடங்கினார்கள். இன்னும் 20 நிமிடங்களில் 2 கோல்களையாவது அடித்தால்தான் சமன் செய்ய முடியுமென்ற இக்கட்டான சூழலில், எம்பாப்பே தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். அதன் பலனாக, 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்து 2 - 1 என்ற நிலைக்குக் கொண்டுவந்தார். எனினும் அது போதாதே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே 81வது நிமிடத்தில்... துல்லியமாகச் சொல்வதானால் 97 விநாடிகளில் அடுத்ததொரு அற்புதமாக கோலை எம்பாப்பே அடித்தார். ஆட்டம் சமமானது.

 

The finale should be like this! Messi… Mbappe… Magic Minutes!

 

ஆம்... வெறும் 97 விநாடிகளில் ஆட்டமே மாறிப்போய் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமே ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த நிலை மாறி, பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆடத் தொடங்கினார்கள். அதையடுத்து எம்பாப்பேவைச் சுற்றியே ஆட்டம் அமைந்தது. அவரது கால்களுக்கிடையே பந்து சிக்கினாலே அர்ஜென்டினா வீரர்கள் பதட்டமானார்கள். இப்படியாக 2 - 2 என முடிய, உபரி நேரம் வழங்கப்பட்டது. இதில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்க முடியவில்லை. சில முயற்சிகள் கோல் கீப்பர்களால் தடுக்கப்பட்டன. உபரி நேரத்தின் இரண்டாம் பாதியில், மீண்டும் அர்ஜென்டினா சுதாரித்துக்கொள்ள, அருமையானதொரு கோலை மெஸ்ஸி அடித்தார். அர்ஜென்டினா 3 - 2 என முன்னிலை பெற்றது! அப்போது ஆஃப் சைடாக இருக்குமோவெனச் சரிபார்த்ததில், ஆஃப் சைட் இல்லையென்பது தெரிய, கோல் உறுதியானது. 

 

அடுத்து எம்பாப்பே புயல் வீசத்தொடங்க, அவரிடம் பந்து போனாலே அதைத் தடுக்க அர்ஜென்டினா வீரர்கள் பதட்டமாக... தவறு செய்ய... பிரான்ஸ்க்கு பெனால்ட்டி வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. இம்முறை எம்பாப்பே தனது ஹாட்ரிக் கோலை அடித்தார்! ஆக, உபரி நேரத்திலும் ஆளுக்கு ஒரு கோல் என்று சமமான நிலைக்கு வந்தனர்! இந்த கோல் அவரை சாதனையாளராக மாற்றியது! உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது ஹாட்ரிக்காக இது அமைந்தது. இதற்கு முன்னதாக 1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஜியோஃப் ஹர்ஸ்ட் அடித்திருந்தார். அதேபோல், தங்க ஷூ விருதினைப் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதுவரை நடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில், முதல் 90 நிமிடங்களில் சமமான கோல்கள், உபரி நேரத்திலும் சமமான கோல்களென அடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதற்கு எம்பாப்பே தான் காரணமாக இருந்தார். அதேபோல், இவரது ஹாட்ரிக்கால் மட்டுமே ஆட்டம் சம நிலைக்கு வந்தது என்பதும் ஒரு சாதனையே. 

 

The finale should be like this! Messi… Mbappe… Magic Minutes!

 

இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியினர், அடுத்துவந்த பெனால்ட்டி ஷூட் அவுட்டில், எம்பாப்பேக்கு அடுத்துவந்த வீரர்கள் சொதப்பியதன் காரணமாக, பிரான்ஸ் தோல்வியைத் தழுவியது. பெனால்ட்டி ஷூட்டிலும் எம்பாப்பே ஒரு கோலடித்ததன் மூலம், ஒரு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில், 4 கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்!  மொத்தத்தில், "இறுதியாட்டம்னா இப்படித்தாய்யா இருக்கணும்!" என்று சொல்வதற்கேற்ற க்ளைமாக்ஸ் காட்சிகளுடன், மெஸ்ஸி Vs எம்பாப்பே அணியின் மோதல் விறுவிறுப்பாக அமைந்தது. அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.