Skip to main content

"எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது" - குழந்தை மரணத்தால் வேதனையில் ரொனால்டோ 

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Ronaldo in agony over his new born child demise

 

போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ, தனக்கு சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

 

ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில், தனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக கடந்த அக்டோபரில் ரொனால்டோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரொனால்டோ நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  

 

புதிதாக பிறந்த மற்றொரு பெண் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள ரொனால்டோ, இது அனைத்து பெற்றோர்களும் உணரக்கூடிய கடினமான வலி என்றும் புதிதாக பிறந்த பெண் குழந்தைதான் இந்தத் தருணத்தை நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும் வாழ்வதற்கான வலிமையைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் அந்த அறிக்கையில், இந்த இழப்பால் கடுமையாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.      

 

 

Next Story

களமிறக்கப்படாத ரொனால்டோ; போர்ச்சுக்கல் பயிற்சியாளர் அணியில் இருந்து நீக்கம்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

An uncapped Ronaldo; Portugal coach sacked from squad

 

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோவை தென்கொரியா உடனான ஆட்டத்தில் களமிறக்கவில்லை. எனினும் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட கோன்கலோ அந்தப் போட்டியில் 3 கோல்களை அடித்தார். ஆனால், இந்த யுக்தி காலிறுதியில் எடுபடவில்லை. மொராக்கோ உடனான போட்டியில் ரொனால்டோ முதல் பாதியில் பெஞ்ச் செய்யப்பட்டார். 

 

அந்தப் போட்டியில் போர்ச்சுக்கலுடன் மொராக்கோ அணி கடுமையாகப் போட்டியிட்டு முதல் பாதியிலேயே கோல் அடித்தது. இரண்டாம் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்பட்டாலும் மொராக்கோ அணி சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போர்ச்சுக்கல்லை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் செய்தது. 

 

இதனால் இந்தப் போட்டியில் மொராக்கோ வெற்றிபெற்றது. இதனால் போர்ச்சுக்கல்லின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். போர்ச்சுக்கல் அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதன் விளைவாக அணி நிர்வாகம் பயிற்சியாளர் சாண்டோஸை விடுவித்துள்ளது. 2024 யூரோ தொடர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த சாண்டோஸ், இந்த உலகக்கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறியதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

37 வயதாகும் ரொனால்டோ இம்முறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவுடன் இருந்தார். போட்டியில் தோற்றதாலும் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்பதாலும் களத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார். 

 

 


 

Next Story

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ; மொராக்கோவுடன் தோற்று தொடரில் இருந்து  வெளியேறியது

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

Ronaldo left in tears; Lost to Morocco and exited the series

 

ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதியின் மூன்றாவது போட்டியில் மொராக்கோ - போர்ச்சுக்கல் அணிகள் விளையாடின.

 

காலிறுதியில் மொராக்கோ வெற்றி பெற்றால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெறும். போர்ச்சுக்கல் வென்றால் நான்கு முறை இயலாமல் ஐந்தாவது முறையாக தொடரும் ரொனால்டோவின் உலகக்கோப்பைக்கான கனவு தொடர்ந்திருக்கும். இதுவே இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் எகிற வைத்தது. 

 

கடந்த போட்டியைப் போலவே ரொனால்டோ தொடக்க லெவனில் களமிறக்கப்படவில்லை. மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமை பெற்றபின் அந்த அணி அட்டாக் செய்ய முன்னேறினர். இதனால் போர்ச்சுக்கல் அணி தடுமாற மொரக்கோ அணி 42 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

 

இரண்டாம் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். எனினும் மொராக்கோ அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இரண்டாம் பாதியும் முடிவுக்கு வர இரு அணிகளும் எந்த கோல்களையும் அடிக்கவில்லை. இதனால் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

37 வயதாகும் ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்பதால் களத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.