Ronaldinho

Advertisment

பிரபல முன்னாள் கால்பந்து வீரரான ரொனால்டினோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரொனால்டினோ பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் ஆவார். தற்போது அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "பெலோ ஹரிஸாண்டியில் உள்ள விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளேன். எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. தற்போது நலமுடன் உள்ளேன்" எனப் பேசியுள்ளார்.

Advertisment

ரொனால்டினோவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பூரண குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.