நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதியடைந்துவிட்ட நிலையில் இன்று இந்தியா - இலங்கை இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆட்டத்தை முடித்த நிலையில், இந்தியா பேட் செய்யத் தொடங்கியது. சற்று நிதானமாகத் தொடங்கிய ஒப்பனர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அடுத்தடுத்து அதிரடியை தொடங்கினார்கள்.

rohith sharma

Advertisment

Advertisment

ரோஹித் ஒரு புறம் 14 ஃபோர்கள் 2 சிக்ஸ்கள் என அடித்து 103 ரன்கள் எடுக்க, மறுபுறம் கே.எல்.ராகுலும் அவரை பின்தொடர்ந்தார். 103 ரன்களில் ரோஹித் கேட்ச் கொடுத்து வெளியேற கோலி களத்திற்கு வந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுலும் சதத்தை எட்டினார். 40 ஓவர்கள் முடிந்த நிலையில் 234 ரன்கள் அடித்து ஸ்ட்ராங்காக நின்றது இந்திய அணி. ஒரு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையோடு வெளியேறினார் ரோஹித். மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குடென்சன் அதிகமில்லாத எண்டெர்டெயின்மெண்ட்டாக இருந்தது இன்றைய ஆட்டம்.