rohit sharma

Advertisment

இந்தியஒருநாள்மற்றும் டி20 அணியின்தொடக்கஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித்சர்மாஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சிலபோட்டிகளில் விளையாடாதரோகித்சர்மா, ப்ளே-ஆப்மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

இருப்பினும் காயம்முழுமையாக குணமடையாததால்ரோகித்சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில்இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், ரோகித் சர்மா டெஸ்ட்தொடரில்ஆடுவார்எனஇந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காகதேசிய கிரிக்கெட்அகடாமியில் பயிற்சி பெற்றுவந்தார். இந்தநிலையில், நேற்றுரோகித் சர்மாவுக்கு உடல் தகுதி சோதனை நடைபெற்றது. அச்சோதனையில் ரோகித் சர்மா, தனது முழு உடல் தகுதியை நிருபித்தார்.

இதனைத்தொடர்ந்துரோகித் சர்மா, உடல் தகுதியை நிரூபித்ததைஉறுதிப்படுத்தி இந்தியகிரிக்கெட்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆஸ்திரேலியாவிற்கு சென்றபின் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் ரோகித் சர்மாவிற்கு, இந்திய அணியின்மருத்துவகுழு, மீண்டும் உடல் தகுதி சோதனைநடத்தும். அதன்முடிவைப் பொறுத்தே, ஆஸ்திரேலிய தொடரில்ரோகித் ஆடுவதுகுறித்துமுடிவெடுக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.