Advertisment

தோனி இல்லாவிட்டால் கஷ்டம்தான் - ரோஹித் ஷர்மா பேச்சு...

நேற்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக இந்த போட்டியில் தோனி விளையாடாத நிலையில் இதில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

rohit sharma speech at post match presentation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

போட்டி முடிந்த பின்னர் இதுபற்றி பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "தோனி இல்லாதது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அது எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. அவர் இருக்கும் வரை அந்த அணியை வெல்வது கஷ்டம். கடைசி வரை வெற்றிக்காக போராடக்கூடியவர் அவர். ஆனால் அவர் இல்லாத சூழ்நிலையில் சென்னை அணி சேஸிங் செய்வது கடினம்தான். டாஸ் வென்ற சென்னை அணி இந்த ஆடுகளத்தில் எப்படி சேஸிங்கை தேர்வு செய்தது என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது. நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நான் அரை சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என கூறினார். சென்னை அணியில் தோனி இல்லாதது ரசிகர்களுக்கு கவலை அளித்தாலும் எதிர் அணியினருக்கு எப்போதும் மகிழ்ச்சியாகவே அமைகிறது என இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

CSK Dhoni ipl 2019
இதையும் படியுங்கள்
Subscribe