கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியாக சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை அணி இதற்கான தீவிர பயிற்சியில் இருக்கும்போது ரோஹித்ஷர்மா அடித்த 95 மீட்டர் சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்த பேருந்தை பதம் பார்த்தது.
மும்பை அணி நிர்வாகம் அந்தகாணொளியை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, அதில் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிப்பார். லெஜண்ட் மைதானத்திற்கு வெளியே அதை அடிப்பார். ஹிட்மேன் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்து அதை பேருந்து மீதும் அடிப்பார் என நகைச்சுவையாகபதிவிட்டுள்ளது.
? Batsmen smash sixes
? Legends clear the stadium
? Hitman smashes a six + clears the stadium + hits a moving ?#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/L3Ow1TaDnE