Skip to main content

‘ஹிட்மேன்’ரோஹித் ஷர்மா டி20யில் சாதனை...

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

 

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை நான்கு பக்கமும் பரக்கவிட்டு 220 ரன்களை இலக்காக வைத்திருந்தனர். அந்த கடின இலக்கை கொண்டு ஆடிய இந்திய அணி மலமலவென விக்கெட்டுகளை விட்டு, மிகவும் மோசமான தோல்வியை சந்திதது. அதனால் இந்த இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துடன் இந்திய அணி விளையாடிவருகிறது. இந்தமுறையும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடினாலும் கடந்த முறையை போன்று விளையாட முடியாமல் சிரமப்பட்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர் குருனால் பாண்டியா 23 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு.
 

இந்நிலையில் பேட்டிங் ஆட வந்த இந்திய அணியின் ரோஹித் ஷர்மா சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து, இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2,280 ரன்கள் சேர்த்து, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து  வீரர் மார்ட்டின் குப்தில் சாதனையை தகர்த்தார் ரோகித் சர்மா.
 

மேலும் இந்திய மூன்று விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை அடித்து நியூசி அணியை வீழ்த்தியுள்ளது.