Advertisment

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு - வெளியான தகவல்!

ROHIT SHARMA

Advertisment

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரானஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடப்போகும்இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தச் சூழலில் இரண்டு டெஸ்டுகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், அந்தப் போட்டியில் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும்தகவல் வெளியானது. மேலும், ஃபார்மில் இல்லாத ரஹானே தொடர்ந்து துணை கேப்டனாக இருப்பார் எனவும்தகவல் வெளியானது.

இந்தநிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் அணிக்குத் தலைமை தாங்கும் ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதால் முதல் டெஸ்டில் மட்டும் ரஹானே அணியின் கேப்டனாக இருப்பார் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஷமி, பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

INDIA VS NEW ZEALAND MATCH Rohit sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe