rohit sharma

Advertisment

இந்தியகிரிக்கெட்அணியின்தொடக்கஆட்டக்காரரும், ஒருநாள்மற்றும் 20 ஓவர்அணிகளின் துணை கேப்டனுமான ரோகித்சர்மாஐபிஎல் தொடரின்போது காயமடைந்தார். காயம்முழுமையாகக்குணமடையாததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர்போட்டிகளில் இடம்பெறவில்லை. முழு உடல்தகுதிபெற்றால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்தொடரில்இடம்பெறுவார் எனஇந்தியகிரிக்கெட்வாரியம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில்உடல் தகுதியை நிரூபித்தரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்றாலும் கரோனாதடுப்பு நடைமுறையாகத் தனிமையில்இருந்தததால்முதல் இரண்டு டெஸ்ட்போட்டிகளில் விளையாடவில்லை.

இந்தநிலையில்ரோகித் சர்மா, 14 நாள் தனிமைக்குப் பிறகு,இன்று இந்திய அணியோடு இணைந்தார். அணியோடு இணைந்தரோகித்சர்மாவை இந்திய அணி வீரர்கள்வரவேற்றனர்.