Advertisment

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா...

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

Advertisment

rohit sharma creates new record

இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதன்முதலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 176 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இன்று இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சின் போது, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 127 ரன்கள் அடித்தார். இதன்மூலம், ஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் முதல் போட்டியிலேயே, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித். இதற்கு முன்பு கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

team india Rohit sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe