ROHIT

Advertisment

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.

இதனையடுத்துரோகித் சர்மா, நடைபெற்று வரும் உலகக்கோப்பைக்குபிறகு இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில்இருபதுஓவர் உலகக்கோப்பைக்குபிறகு ஒருநாள்அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் எனத்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிசிசிஐ, ஒருநாள்மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கு தனி தனி கேப்டனை நியமிப்பதை விரும்பாதுஎன்றும், அதேநேரத்தில்ஒருநாள்உலகக்கோப்பைக்கு24 மாதங்களே இருப்பதால் ஒருநாள்அணியின் கேப்டன்ஷிப்பும்ரோகித்துக்கு வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

ஏற்கனவே இந்திய அணி, இருபது ஓவர் உலகக்கோப்பையைவெல்லவிட்டால், ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் ரோகித் நியமிக்கப்படுவார் எனத்தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.