team india

சர்வதேச கிரிக்கெட் வாரியம், 2021 ஆம் ஆண்டிற்கான ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அணியில், ரோகித் சர்மா, அஸ்வின், ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

ரோகித் சர்மா, கடந்தாண்டு இரண்டு சதங்களோடு906 ரன்கள் குவித்து அசத்தினார். கடந்தாண்டு அவரது சராசரி 47.68 ஆகும். அதேபோல் ரிஷப் பந்த், 12 போட்டிகளில் 39.36 சராசரியில் 748 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்த அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரானஅஸ்வின், 9 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். கடந்தாண்டு அவரது பந்துவீச்சு சராசரி 16.64 ஆக இருந்தது. மேலும் அஸ்வின் சதமும் விளாசியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

2021 ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் அணி வருமாறு;திமுத் கருணாரத்னே (இலங்கை), ரோகித் சர்மா (இந்தியா), கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூசிலாந்து), மார்னஸ் லாபுஷேன் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஃபவாத் ஆலம் (பாகிஸ்தான்), ரிஷப் பந்த் (இந்தியா), ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), கைல் ஜேமிசன் (நியூசிலாந்து), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), மற்றும் ஹசன் அலி (பாகிஸ்தான்).