இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

rohit sharma and mayank agarwal breaks 12 year old record of sehwag and dravid

Advertisment

Advertisment

இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று காலை தொடக்கி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்து தந்தனர். 154 பந்துகளில் சதம் அடித்து, டெஸ்ட் போட்டிகளில் தனது 4 ஆவது சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா. மேலும் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்படுவதற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட அவர், இந்த இன்னிங்ஸ் மூலம் விமர்சகர்களுக்கு பதிலளித்துள்ளதாக துள்ளிக்குதிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஜோடி 317 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம், 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ஷேவாக் - டிராவிட் ஜோடி 268 ரன்கள் குவித்திருந்த சாதனையை இந்த ஜோடி தற்போது முறியடித்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது.