Advertisment

"ரெய்னாவின் கருத்தில் உடன்பாடில்லை..." - ரோஹித் ஷர்மா

rohit sharma

Advertisment

ரெய்னாவின் கருத்தில் உடன்பாடில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இந்திய அணிவீரர் ரெய்னா ரோஹித் ஷர்மா பற்றி பேசுகையில், "ரோஹித் மிகவும் பண்பான மனிதர். மற்றவர்கள் கருத்தை திறந்த மனதுடன் கேட்க கூடியவர். தோனியை போலவே அமைதியானவர். இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து சரியாக வழிநடத்தக் கூடியவர்" என மனம் திறந்து பாராட்டினார். இந்நிலையில் ரோஹித் ஷர்மா ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் வழியாக உரையாடும்போது ரசிகர்கள் இது பற்றி அவரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, நானும் அந்த செய்தியை கவனித்தேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. தோனியைப் போல யாரும் இருக்க முடியாது. அவர் வித்தியாசமானவர். நாம் அனைவருமே தனிப்பட்ட வகையில் பலம், பலவீனங்களை கொண்டவர்கள்" என்றார்.

Raina Rohit sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe