Advertisment

கோலியை ரன்அவுட் ஆக்கிவிட்டு ரன்குவிக்கும் ரோகித் சர்மா!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கேப்டன் கோலியை ரன்அவுட் ஆக்கும்போதெல்லாம் அதிக ரன்கள் குவித்துள்ளார். இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து முறை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அரங்கேறியிருக்கிறது.

Advertisment

Kholi

தென் ஆப்பிரிக்க அணியுடனான ஐந்தாவது இருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை பேட்டிங் செய்யபணித்தது. தவான் பெவிலியன் திரும்பிய பின்னர், ரோகித் - கோலி இணை சிறப்பாக ரன்குவிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ஸ்டிரைக்கிங்கில் இருந்த ரோகித் சர்மா பந்தைத் தடுத்தாடி விட்டு ரன் ஓடுவதற்காக கோலியை அழைத்துவிட்டு, ஓடாமல் நின்றுவிட்டார். டுமினி தன் கையில் சிக்கிய பந்தை நேராக நான்-ஸ்டிரைக்கிங் பகுதியில் இருந்த விராட் கோலியின் ஸ்டம்புகளில் வீசி கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து வந்த ரஹானேவையும் ரோகித் அதே பாணியில் அவுட் ஆக்கிவிட்டு, நிதானமாக ஆடத்தொடங்கினார். இந்தப் போட்டியில் 115 (126) ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் ரோகித் சர்மா. இந்தப் போட்டியில் இந்திய 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், 2011ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களும், 2013ஆம் ஆண்டு ஆஸிக்கு எதிராக 209 ரன்களும், 2014ஆம் ஆண்டு 264 ரன்களும், 2016ஆம் ஆண்டு 124 ரன்களும், நேற்றைய போட்டியில் 115 ரன்களும் ரோகித் சர்மா, தனது இணை ஆட்டக்காரர் கோலியை அவுட் ஆக்கிய பின்னர் எடுத்திருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்தப் பாணியை சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன் கலாய்த்து வருகின்றனர்.

Rohit India South africa cricket ODI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe