இங்கிலாந்திற்கு எதிரான முன்றாம் டி-20தொடரில்இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா தான் அடித்த சதத்தை இறந்த வெள்ளை காண்டாமிருகமான சூடானுக்கு பரிசளித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/werwR.jpg)
கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டி 20 தொடரில் இங்கிலாந்து 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளுடன் 198 ரன்கள் எடுத்து 199 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வைத்தது. அதில்இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா 5 சிக்ஸர் ,11 பவுண்டரிகள் என56 பந்துகளில்100 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் இந்தியா18.4 ஓவரில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் சதம் அடித்து அசத்திய ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ரோகித் ஷர்மா தான் அடித்த சதத்தைஅரியவகை காண்டாமிருக இனத்திலிருந்து இறுதியாக இறந்து போன சூடான் எனும் ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு பரிசளித்துள்ளார். உலகம் முழுவதையும் திரும்பி பார்க்கவைத்தது இந்தசூடான் எனும் வெள்ளை காண்டாமிருகத்தின்மறைவு.
இதுதொடர்ப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தான் அடித்த இந்த சதத்தை இறந்த என் நண்பன் சூடானுக்கு பரிசளிக்கிறேன் என் உருக்கமாக பதிவிட்டுள்ளார் ரோகித்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)