ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்விராட் கோலி.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தலைமையில் விளையாடி வருகிறது இந்தியா. நேற்று நடைபெற்ற ஆறாவது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது இந்த சாதனையை படைத்தார் விராட் கோலி.
இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஹாசிம் அம்லா 381 போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டி விராட் கோலி விளையாடிய 363 ஆவது போட்டி ஆகும். இந்த போட்டியில் 17 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம் உலகில் அதிவேகமாக 17 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சென்ற வருடம் தனது 350 ஆவது போட்டியில் வேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.