Skip to main content

ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!!!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
roger federer


இந்தாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒப்பன் போட்டி நியு யார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டிருக்கும் முன்னணி வீரரான சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதிப்பெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்லிமேனிடம் விளையாடி தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய இச்சுற்றில் 6-3, 5-7, 6-7, 6-7 என்ற செட் கணக்கில் பெடரர் தோல்வியை தழுவியுள்ளார். 

 

Next Story

18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை இரட்டை புற்றுநோயால் பாதிப்பு

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

18 Grand Slam winning tennis player with double cancer

 

டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர் மார்டினா நவ்ரதிலோவா. தற்போது 66 வயதாகும் மார்டினா டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவருக்குத் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.

 

தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சையினைத் துவங்கியபோது மார்பகத்திலும் புற்றுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து மார்டினாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது, “மார்டினாவிற்கு கண்டறியப்பட்ட இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் குணப்படுத்தக் கூடியதுதான் எனக் கூறியுள்ளனர். 

 

இந்நிலையில் இது குறித்து மார்டினா கூறுகையில், “இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளன. வலி தீவிரமானது என்றாலும் சிகிச்சை பெற்று குணமடைய முடியும் என நம்புகிறேன். இந்த நோயையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவேன்” எனக் கூறியுள்ளார். 2010ல் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கண்ணீருடன் டென்னிஸிலிருந்து விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

Roger Federer loses final competitive match of his career at Laver Cup 2022

லண்டனில் நடந்த லேவர் கோப்பை தொடருடன் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் களத்தில் இருந்து விடை பெற்றார். 

Roger Federer loses final competitive match of his career at Laver Cup 2022

ஐரோப்பிய அணியில் இடம் பெற்றிருந்த ரஃபேல் நடாலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரரும் இணைந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சாக்- பிரான்ஸஸ் டியோபோ இணையுடன் மோதியது. ஆடவர் இரட்டை போட்டியாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்ப செட்டை நடால் இணை 6-4 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தினர். ஆனால் அடுத்த செட்டை கவனமுடன் விளையாடிய அமெரிக்க இணை 7-6 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தியது. இதனால் இறுதி செட்டில் விறுவிறுப்பு கூடிய நிலையில் ஆட்டம் வெகு நேரம் நீடித்தது. இறுதியில் 9-11 என்ற கணக்கில் ஃபெடரர்- நடால் இணை போராடி தோல்வி அடைந்தது. 

Roger Federer loses final competitive match of his career at Laver Cup 2022

கடைசி போட்டியில் விளையாடிய பின் பேசிய ஃபெடரர், தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர் ரஃபேல் நடாலும், ரசிகர்களும். 

e434

ரஃபேல் நடாலுடன் இணைந்து கடைசிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.