"தோனி கொஞ்சம் உடல் தகுதியை இழந்துவிட்டார்"... - முன்னாள் வீரர் ரோஜர் பின்னி

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணி தேர்வுக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ரோஜர் பின்னி சமீபத்திய பேட்டி ஒன்றில் தோனியின் உடற்தகுதி குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறும்போது, "தோனி மெல்ல தன் உடற்தகுதியை இழந்து வருகிறார். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் அவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய சமீபத்திய போட்டிகளை பார்க்கும்போது, அவர் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த காலங்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்பது போன்று தோன்றுகிறது. இனி வரும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிவிடுவது குறித்து அவர் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என கூறினார்.

அணி தேர்வின்போது, தோனி உடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்த பின்னி, "சிறிதும் தலைக்கணம் இல்லாத மனிதர் அவர். மூத்த வீரர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார். அவருடைய தேர்வு என்ன என்பதிலும், தனக்கு என்ன வேண்டும் என்பதிலும் மிகத்தெளிவாக இருப்பார். களத்தில் இருந்து விளையாடப்போவது அவர் தான். அதனால் அவர் கேட்பதை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் வேலை" என்றார்.

MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe