Advertisment

robin uthappa

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில், கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியின் போது, ராஜஸ்தான் அணி வீரர் உத்தப்பா பிசிசிஐ விதித்திருந்த கரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறிய சம்பவம் நடந்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே ஐபிஎல் தொடர் நடைபெறுவதால், பிசிசிஐ பல கட்டுப்பாட்டு விதிகளை விதித்திருந்தது. அதன்படி, வீரர்கள் பந்துகளில் பௌலிங் செய்யும் போதோ அல்லது ஃபீல்டிங் செய்யும் போதோ எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது வீரர்கள் வழக்கமாக ஈடுபடும் செயல் என்பதால், இது எந்த அளவிற்கு பின்பற்றப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தொடரின் 12-வது நாளில் முதல் முறையாக இந்த விதி ராஜஸ்தான் அணி வீரர் உத்தப்பாவால் மீறப்பட்டுள்ளது.