சர்வதேச கிரிக்கெட்வாரியம், ஒரு ஆண்டில்சிறப்பாக விளையாடும்வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட்வாரியம், மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பாராட்டும் வகையில், மாதத்திற்கான சிறந்த வீரர் விருதைஜனவரிமாதத்திலிருந்து வழங்க முடிவுசெய்தது.
இந்த விருதுக்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரானடெஸ்ட்தொடரை கைப்பற்றக்காரணமாய் விளங்கியஇந்தியவீரர் ரிஷப்பந்த், இலங்கையுடனான போட்டியில்சிறப்பாக விளையாடி ரன்குவித்தஜோரூட், ஜனவரிமாதம் ஐந்து ஒருநாள்போட்டிகளில் விளையாடி மூன்று சதம் அடித்த, அயர்லாந்தின்பால் ஸ்டிர்லிங் ஆகியோர்பரிந்துரைசெய்யப்பட்டிருந்தனர்.
தற்போது இந்த விருதுக்குஇந்திய வீரர் ரிஷப்பந்த், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மூத்த விளையாட்டு ஊடகவியாளர்கள், முன்னாள் கிரிக்கெட்வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஐசிசிஹால் ஆஃப்ஃபேமில்(icc hall of fame) இடம்பெற்றவர்கள் ஆகியோர்அடங்கியகுழு ஒன்றும், கிரிக்கெட்ரசிகர்களும் வாக்களித்து இந்த விருதுக்குரிஷப்பந்தைதேர்வுச் செய்துள்ளனர்.