rishabh pant

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இருபது ஒவர் தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல் ராகுல் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியதையடுத்து ரிஷப் பந்த், அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இதற்கிடையே சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேலும் காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபது ஒவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதேபோல் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக, குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.