
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட்,போட்டி தற்போதுநடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில்முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து ஆடியஇந்தியா 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா, தனதுஇரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
இதற்கிடையே, இந்தியவீரர் ரிஷப்பந்த், பேட்டிங் செய்யும்போது காயமடைந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கம்மின்ஸ் வீசியபந்து, அவரதுமுழங்கையைபதம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து வலியால்துடித்தரிஷப்பந்திற்கு, மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு பேட்டிங் செய்த அவர், 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ரிஷப்பந்திற்குகையில்காயம் ஏற்பட்டுள்ளதா எனஅறியசோதனை செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரிஷப்பந்திற்குமாற்று வீரராகவிருத்திமான்சாஹாவிக்கெட்கீப்பராக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே ஷமி, உமேஷ்யாதவ், கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்கள்காயம்காரணமாகஇந்த தொடரிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us