Advertisment

கில்கிறிஸ்ட்... இவரு... அப்பறம் யாருமில்ல - ரிஷப் பந்தின் புதிய சாதனை!

rishabh pant

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவதுடெஸ்ட்போட்டி, நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில்பங்கேற்க இந்திய அணி, இந்தப் போட்டியைவெல்லவோ, ட்ராசெய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Advertisment

இதற்குப் பிறகு, ஆடியஇந்திய அணி தடுமாறினாலும் ரோகித், ரிஷப்பந்த், வாஷிங்டன் சுந்தர்ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றது. முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டியரிஷப்பந்த் சதமடித்தார். பந்த் 118 பந்துகளில் 101 ரன்கள்விளாசினார். இந்தியாவில்இது பந்த்தின்முதல் சதமாகும்.

Advertisment

இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார் ரிஷப்பந்த். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் சதமடித்திருந்த பந்த், இன்றைய சதம்மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும்சதமடித்த இரண்டாவது விக்கெட்கீப்பர்என்ற பெருமையைப் பெற்றார். இதற்குமுன்பு கில்கிறிஸ்ட் மட்டுமேஇந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

Adam gilchrist INDIA VS ENGLAND rishabh pant
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe