Advertisment

இதுதான் எனக்கு பிட்னஸ்! - ரிஷப் பாண்ட் வெளியிட்ட பிட்னஸ் வீடியோ

rishab

ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விதமான சேலஞ்ச் ட்விட்டரில் வலம்வருவது வழக்க்கம். ஏதாவது ஒரு நல்லெண்ண நோக்கத்தோடு பிரபலங்கள் தொடங்கிவிடும் இந்த சேலஞ்ச்கள், கொஞ்ச நாளுக்கு வைரலாகிக் கொண்டிருக்கும். அந்த வகையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ஃபிட்னஸ் சேலஞ்ச் ஒன்றை தொடங்கிவைத்தார்.

Advertisment

அதன்படி, இந்தியாவில் உள்ள அனைவரும் ஃபிட்டாக இருந்தால்தான் இந்தியாவும் ஃபிட்டாக இருக்கும் என்ற நோக்கத்தையும் அதில் பதிவுசெய்து, அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்தார்.

Advertisment

அதைத் தொடர்ந்து விராட் கோலி, அனுஷ்கா சர்மா என பலரும் தாங்கள் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு, மற்றவர்களையும் டேக் செய்து பரப்பினார்கள். இந்த சேலஞ்சைப் பொருத்தவரை அனைவரும் தாங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்வீடியோவையே வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட், மாறுபட்ட ஒரு ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்த சேலஞ்சைத் தொடங்கிவைத்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றி. இது வித்தியாசமாக இருந்தாலும், என்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ள இது உதவியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, ரிஷப் பாண்டின் சகோதரி ஷாக்சி பாண்ட் ஆகியோரையும் டேக் செய்துள்ளார் ரிஷப் பாண்ட்.

Narendra Modi sports virat kohli Fitness challenge Rishab Pant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe