Advertisment

உலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...

வரும் 30 ஆன் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ள உலகக்கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ricky ponting prediction about icc world cup 2019

உலகக்கோப்பை பற்றி கூறியுள்ள அவர், "வார்னர் மற்றும் ஸ்மித் வருகையால் ஆஸ்திரேலியா அணி புது பலம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினர். இது உலகக்கோப்பையில் தொடர்ந்தால், ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலகக்கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும். ஆனால் இந்த உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணிக்கு உள்ளூர் மைதானம், தட்பவெப்பம் என அனைத்தும் சாதகமாக அமையும். ஆனால் எப்படி இருந்தாலும் இந்த இரு அணிகளுக்கும் கடும் போட்டி தர கூடியது இந்திய அணிதான். உலகக்கோப்பைக்கான போட்டி இந்த மூன்று அணிகளுக்கு இடையே தான் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

England Australia icc worldcup 2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe