rohit sharma

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில், வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, ரிக்கி பாண்டிங் மற்றும் கவாஸ்கர் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மீதமிருக்கும் டெஸ்ட் தொடர்கள் குறித்து விவாதித்தனர். அப்போது பேசிய ரிக்கி பாண்டிங், "ரோகித் நிச்சயமாக விளையாடுவார். அவர் மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரை விடச் சிறந்த டெஸ்ட் வீரர். அவர் உடல் தகுதியுடன் இருந்தால், அவர் உடனடியாக டாப் ஆர்டரில் இடம்பெறுவார்" எனக் கூறியுள்ளார்.

ரோகித் சர்மா தற்போது ஆஸ்திரேலியாவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். எனவே, ஆஸ்திரேலியாவிற்கெதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆட அவருக்கு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment