Advertisment

"அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்" - சுரேஷ் ரெய்னா

publive-image

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

Advertisment

மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . இது குறித்து பதிவிட்ட அவர் பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ், உத்தரப்பிரதேச கிரிக்கெட் அணிகளுக்கு தனது நன்றியைத்தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடினார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த ஐபிஎல் அணி நிர்வாகமும் இவரை ஏலம் எடுக்காத நிலையில் ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராக பணியாற்றினார்.

Advertisment

ஓரிரு தினங்கள் முன்பு மீண்டும் பயிற்சிக்கு திரும்பியதாக தனது சமுக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ நாடெங்கும் வைரல் ஆனது. ஆனால் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

retirement
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe