11வதுஐ.பி.எல் போட்டி கோலாகலமாக நடந்துவருகிறது.இதில் இம்முறை கோப்பை நமக்கே என்றல்லாம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் கன்னடத்தில் கூறி வீடியோவெல்லாம் போட்டனர். இதனை மற்ற அணி ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்தனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
இந்நிலையில் இங்குள்ளவர்கள்தான்ஆர்.சி.பியை கேலி செய்கின்றனர் என்று பார்த்தால் ஐஸ்லேண்ட் கிரிக்கெட் வாரியமும்தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் கோலியைகிண்டல் செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் கம்பீர், வார்னர், ரோஹித் ஷர்மா ஆகியோர் ஐ.பி.எல் கப்புடன் இருப்பது போன்றும், கோலி மட்டும் காஃபி கப்புடன் இருப்பதுபோன்றும்அந்த புகைப்படம் உள்ளது. மேலும் அந்த புகைப்படத்தின் மேல் "ஐ.பி.எல் வீரர்கள் கப்பை பிடித்திருக்கும் இந்த அழகிய புகைப்படத்தை பாருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தனர்.