Skip to main content

ஆர்.சி.பி. அணியும், மகளிர் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து விளையாடும் டி20 போட்டி

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களும், இந்திய சர்வதேச மகளிர் கிரிக்கெட் அணி வீரர்களும் சேர்ந்து டி20 போட்டி விளையாடவுள்ளனர். விராட் கோலி, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர். 

 

mithaliraj

 

ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெண் கிரிக்கெட் வீரர்கள் கருதப்படுவதில்லை. ஆடுகளம், வாய்ப்புகள், சம்பளம், பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகியவை ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அளவில் பாதிகூட பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைப்பதில்லை. ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான அதே சவால்களை பெண் வீரர்களால் எதிர்கொள்ள முடியாது என்ற கருத்தை மாற்றும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு சமமான ஃபிட்னஸ் பெண்களுக்கு இல்லை என்றபோதிலும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக சவால் விடுவதே இந்த போட்டிக்கான நோக்கம். 

 

virat

 

இதற்கு முன்பு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணி வீராங்கனைகள் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் மகளிர் கிரிக்கெட்டர் ஜோ கோஸ், ஆண்கள் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரைன் லாரா விக்கெட்டை எடுத்துள்ளார். 

 

1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட்டில் 50 ஓவர் போட்டி, கிரெக் சாப்பல் தலைமையிலான சர் டொனால்ட் பிராட்மேன் லெவன் மற்றும் சுனில் கவாஸ்கர் தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே நடைபெற்றது.  பிராட்மேன் அணியில் பாபி சிம்ப்சன், டக் வால்டர்ஸ், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் ஆகியோரும், உலக லெவன் அணியில் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிரேம் போலாக், டேவிட் கோவர், ஜோயல் கார்னர் மற்றும் அப்துல் காடிர் போன்ற வீரர்களும் பங்கேற்றனர். 

 

ஜோ கோஸ் என்ற ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் வீராங்கனையும் பிராட்மேன் அணியில் விளையாடினார். இந்த போட்டியில் மகளிர் கிரிக்கெட்டர் கோஸ், லாராவின் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ கோஸ் 1987 முதல்  2000-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா மகளிர் அணிக்காக 12 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

இங்கிலாந்து அணியை சேர்ந்த சாரா டெய்லர், கேட் கிராஸ், அரான் பிரிண்ட்லி, கிளேர் கானர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி ஆகியோர் இதற்கு முன்பு ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுடன் விளையாடியுள்ளனர்.

 

harmanpreet

 

தற்போது நடவிருக்கும் இந்த டி20 போட்டி குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீட் தெரிவிக்கையில் "150 கிமீ வேகத்தில் வரும் பந்தோ அல்லது ஸ்டேடியத்தின் அளவைப் பற்றியோ கவலைப்படுவதை நான் விரும்பவில்லை" என கூறியுள்ளார். அதேசமயம் இந்த டி20 போட்டிக்கான இடமும், தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.