Advertisment

வீரருக்கு கரோனா: மும்பை - பெங்களூர் ஐபிஎல் போட்டி நடப்பதில் சிக்கல்!

daniel sams

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளும்நெருங்கி வருகின்றன. ஐ.பி.எல் போட்டிகள் வரும் 9ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல் ஆகியோருக்கு கரோனாஉறுதியானது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ்நிர்வாகி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இவர்களைத் தவிர்த்து மும்பை மைதான ஆடுகளப் பராமரிப்பாளர்கள் 8 பேருக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரும், விக்கெட் கீப்பிங் ஆலோசகருமான கிரண் மோருக்கு நேற்று (06.04.2021) கரோனாஉறுதிசெய்யப்பட்டது. இந்தநிலையில்பெங்களூர்அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்குகரோனாஉறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கரோனாஅறிகுறிகள் எதுவுமில்லை என பெங்களூர் அணி தெரிவித்துள்ளது.

Advertisment

நாளை மறுநாள் (9.04.2021) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்அணிகள், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவிருக்கும் நிலையில், மும்பை மற்றும் பெங்களூர் அணி குழுக்களில் கரோனா உறுதியாகிருப்பதால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ipl 2021 corona virus bangalore royal challengers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe