"இது இரக்கமற்ற ஆட்டம்" - ஆர்.சி.பி பயிற்சியாளர் பெருமிதம்!

simon katich

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 39 -ஆவது லீக் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்புஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 7 வெற்றிகள், 3 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இவ்வெற்றி குறித்துப் பேசிய பெங்களூரு அணியின் பயிற்சியாளர் சைமன் கட்டிச், "எங்கள் வீரர்கள் நிறைய பாராட்டுகளுக்கு உரியவர்கள். அவர்களது ஆட்டம் எனக்கு முழு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் பவுலர்கள் முதல் சில ஓவர்களிலேயே ஆட்டத்தை நிலை நிறுத்திவிட்டனர். மோரிஸ் மற்றும் சிராஜ் சிறப்பாக விளையாடினார்கள். சிராஜ் இரண்டாவது ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எதிரணிக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. பவர் பிளேயிலேயே அடுத்த இரு விக்கெட்டுகள் வீழ்ந்தது,அவர்களை மீண்டு வர முடியாமல் செய்துவிட்டது. இது இரக்கமற்ற ஆட்டம்" எனக் கூறினார்.

rcb
இதையும் படியுங்கள்
Subscribe