Advertisment

வைரலாகும் ஜடேஜாவின் தமிழ் ட்வீட்!!!

Ravindra Jadeja

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பின் நடைபெறுவதால் இத்தொடர் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் இதற்கான தீவிர பயிற்சியில் உள்ளனர். சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் குறித்து பதிவிட்ட ஒரு தமிழ் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், "2014ம் ஆண்டு ஏற்கனவே அமீரகத்தில் நடந்த போட்டிகளில் விளையாடிய புகைப்படத்தை பகிர்ந்து, 'அந்த அரபிக் கடலோரம்... அந்த நாள் ஞாபகம்... 2020 களத்தில் சந்திப்போம்'.. விசில் போடு" எனப் பதிவிட்டுள்ளார்.

ravindra jadeja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe