ravi shastri talks about indian cricket dhoni icc cup won history 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க, இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisment

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி இந்திய அணியின் செயல்பாடு குறித்து கூறுகையில், "இந்திய அணி 2013 ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் தொடரை வென்ற பிறகு 10 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற முடியாமல் இருந்து வருகிறது. ஆனால் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 இல் நடந்த டி20 உலகக்கோப்பை, 2011இல்நடந்த ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் தோனி அதனை எளிதாக செய்து காட்டியுள்ளார்" எனத்தெரிவித்துள்ளார்.