Advertisment

"தென்னாப்பிரிக்க அணிக்குத் திரும்புங்கள்" டிவில்லியர்ஸுக்கு கோரிக்கை வைத்த இந்திய பயிற்சியாளர்!

AB de Villiers

Advertisment

தென்னாப்பிரிக்க அணிக்குத் திரும்புங்கள் என டிவில்லியர்ஸுக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கோரிக்கை வைத்துள்ளார்.

13-வது ஐ.பி.எல் தொடரின் 28-வது லீக் போட்டி நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் பங்காற்றினார். இதனையடுத்து, அவருக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நேற்று இரவு பார்த்தது நம்ப முடியாத வகையில் இருந்தது. டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச அணிக்குத் திரும்புங்கள். உங்களது ஓய்வு முடிவை பரிசீலனை செய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Ravi Shastri IPL ab de villiers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe