RAVI SHASTRI

Advertisment

ஐபிஎல்தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்றுவரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து அகமதாபாத், லக்னோ என இரண்டு புதிய அணிகள்கூடுதலாகப்பங்கேற்க உள்ளது. இதில் லக்னோ அணியைஆர்பி-சஞ்சீவ்கோயங்காகுழுமமும்,அகமதாபாத் அணியைசிவிசிகேப்பிடல்சும்ஏலம் எடுத்துள்ளனர்.

இந்தநிலையில்சிவிசிகேப்பிடல், அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு ரவி சாஸ்திரியைஅணுகியுள்ளதாகத்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்காகபரத் அருணையும்,பீல்டிங்பயிற்சியாளர் பதவிக்காகஸ்ரீதரையும்சிவிசிகேப்பிடல்அணுகியுள்ளதாகத்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ரவி சாஸ்திரியும்ஐபிஎல்அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்புவதாகவும், அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து அவர் தற்போது நடைபெற்று வரும் 20ஓவர்உலகக்கோப்பைதொடருக்குப்பின்னர் முடிவு செய்வார்எனக்கூறப்படுகிறது.

Advertisment

இந்திய அணியின்பயிற்சியாளர்கள்பொறுப்பில் இருக்கும் ரவி சாஸ்திரி, ஸ்ரீதர், பரத் அருண் ஆகியோரின்பதவிக்காலம் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குத் தொடரோடு முடிவுக்கு வரவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே ராகுல் டிராவிட், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.