Ravi Shastri

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆண்கள் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

Advertisment

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் தற்போது '23 யார்டஸ்' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், அடோர் மல்டி ப்ரோடக்ட்ஸ் (Ador Multi products) என்ற அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களைக் கவரும் வகையில் பல்வேறு விதமான அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கின்றன. 51 சதவிகிதப் பங்கானது அடோர் மல்டி ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்திடமும், 49 சதவிகிதப் பங்கானது 23 யார்டஸ் நிறுவனத்திடமும் உள்ளன.

Advertisment