வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் உலகக்கோப்பைக்காக இந்திய அணி இங்கிலாந்து கிளம்ப உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Advertisment

ravi shastri about dhonis importance in worldcup

அப்போது தோனி குறித்து பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "தோனிக்கு இந்த உலகக்கோப்பையில் மிகப்பெரிய பங்கு உள்ளது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை வாய்ந்தவர் அவர். அவரை விட சிறந்த ஒரு வீரர் இந்த நிலையில் இருக்க முடியாது. இந்த உலகக்கோப்பைக்கு அவர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு வீரர். கடந்த உலகக்கோப்பையை விட இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் சிறப்பாக உள்ளன. எனவே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இது ஒரு அருமையான தொடராக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.