Advertisment

பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரஷீத் கான்

dfgv

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் , தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பாஷ் லீக் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் நேற்று பிரிஸ்பேன் நகரில், பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 58 டி20 போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை ரஷித் கான் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுகளை குறைந்த போட்டியில் பெற்றவர் என்ற சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முந்தைய பிராவோவின் சாதனையை இவர் தற்பொழுது முறியடித்துள்ளார். மேலும் பிக்பாஷ் தொடர் முழுவதும் விளையாட உள்ள ரஷித் கான் அடுத்த சில போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் சர்வதேச அளவில் ஒரு காலண்டர் ஆண்டில், டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் எனும் உலக சாதனையை படைப்பார்.

Advertisment

big bash league cricket Rashid khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe