Advertisment

ஒரே பந்தில் இரண்டு முறை அவுட்... வேடிக்கை காட்டிய ரஷீத் கான்...

Rashid Khan

13-வது ஐ.பி.எல்.தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய 29-வது லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், ஹைதராபாத் அணி வீரர் ரஷீத் கான் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

போட்டியின் 19-வது ஓவரை தாக்கூர் வீச, ஹைதராபாத் அணி வீரர் ரஷீத் கான் அதனை எதிர்கொண்டார். அந்த ஓவரின் இறுதிப்பந்தை ரஷீத் கான் தூக்கி அடிக்க முயற்சிக்க, அதை எல்லைக்கோட்டருகே நின்ற தீபக் சஹார் கேட்ச் செய்தார். பின்னர், பந்தைத் தூக்கி அடிக்கும் போதே, ரஷீத் கான் ஸ்டம்பை காலால் மிதித்தது தெரியவந்தது. களத்தில் இருந்த நடுவர் அவருக்கு ஹிட் விக்கெட் கொடுத்து ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

Advertisment

ஒரே பந்தில் இரண்டு முறையில் விக்கெட்டை பறிகொடுத்த சம்பவத்தின்காணொளி பதிவுஇணையத்தில் வைரலாகி வருகிறது.

IPL Rashid khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe